Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு -கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த முகேஷ் (18), திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. (EVR) கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும், இவர் பகுதி நேர ஊழியராக திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஆர்கேட் வளாகத்தின் 2-வது மாடியில் செயல்பட்டு வரும் ‘Turnz India Corporate Network Pvt. Ltd.’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நிறுவனம் அமைந்துள்ள 2வது மாடியின் வெளிப்புறம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இவர் மீது அருகில் இருந்த மின்வாரிய உயர் அழுத்த (HT) மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

முகேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *