திருச்சி விமான நிலைய கழிவறையில் வெளிநாட்டு கரன்சிகள் கண்டெடுப்பு சர்வதேச போர்டிங் கேட் கழிவறையில், மணிகண்டன் என்ற துப்புரவுப் பணியாளரால் உரிமை கோரப்படாத வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கண்டெடுத்தார்.

சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து திருச்சி சுங்கத்துறை (AIU) அதிகாரிகள் சோதனைச் சாவடிக்கு அருகில் அமைந்துள்ள கழிவறை அறையில் பரிசோதித்தபோது, அதற்குள் மொத்தம் 6100 யூரோ மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட நாணயங்களில்
யூரோ 100 மதிப்புள்ள நோட்டுகள் – 28 நோட்டுகள்.
யூரோ 200 மதிப்புள்ள நோட்டுகள் 14 நோட்டுகள்
யூரோ 500 மதிப்புள்ள நோட்டுகள் – 1 நோட்டுகள்.

மீட்கப்பட்ட 1 யூரோ = ரூ.110.10 என்ற தற்போதைய வெளிநாட்டு நாணயத்தின் மொத்த மதிப்பு ரூ. 6, 71, 610/- (ஆறு இலட்சம் எழுபத்தி ஒரு ஆயிரம் அறுநூற்றுப் பத்து ரூபாய் மட்டும்) என மதிப்பிடப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments