திருச்சி ஸ்ரீரங்கம் நகரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் 7-வார்டு வேட்பாளர்களை அம்மா மண்டபம் சாலையில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் அறிமுகம் செய்து தேர்தல் பரப்புரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேசினார்.
அப்போது….. தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசு இதைவிட அவமானகரமான செயல் கிடையாது .உப்பைக் கூட குஜராத்தில் வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா என கடுமையாக விமர்சித்தார்.
ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது. பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் விமர்சனம் அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார்கள்.

நீட்டு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நீட்டை எதிர்த்தோம்.நீட் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றது. முன்னாள் நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் என்பதை அனைவரும் அறிவார்கள் .நீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முறியடிக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது அதுதான் அதிமுகவின் கேள்வி.
தேவையற்ற நட்சத்திரங்கள் இருந்தால் நல்லது நடக்காது என்பார்கள். அது போல நம்முடன் இருந்த தேவையற்ற நட்சத்திரங்கள் இல்லாமல் சுதந்திரமாக தேர்தலை சந்திக்கிறோம் .இது நல்ல சகுனம் தேர்தலில் நமக்கு நன்மையே நடக்கும்.

கூட்டுறவு கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளில் திமுக அரசு தள்ளுபடி என சொல்லி மோசடி செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். வெள்ள காலங்களில் அதிமுக அரசு 100% இழப்பீடுகள் வழங்கியது. கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்து இன்சுரன்ஸ் தொகையை பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு. ஆனால் விவசாயிகள் இதையெல்லாம் தெரியாமல் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை.
மேலும் பேசிய அவர் அதிமுக அரசு விடியல் அரசு அல்லா மக்களிடம் இருந்து புடுங்கள் அரசு. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத இந்த அரசினால் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் எப்படி கொடுக்க முடியும் என பெண்களிடம் கேட்டால் ஒருவரும் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

வெற்றி பெற்றது மு க ஸ்டாலின் அல்ல பிரசாந்த் கிஷோர் என குறிப்பிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி வருகின்ற லோக்சபா தேர்தலுக்கான அடித்தளம் என்றார்.
 திமுக கண்ணை கசக்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில் வந்திருக்கும் உள்ளாட்சி தேர்தல் இது என ஓ.எஸ்.மணியன் பேசினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn


            
            
            
            
            
            
            
            
            
            


Comments