மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் வடமாடு ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றது. மே 30ஆம் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிக்க வேண்டுமென ஏற்கனவே அரசாணை குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 31ம் தேதி வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கபட்டது. அன்று தமிழக முதல்வர் வருகையால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அல்லித்துறையில் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி இன்று (03.06.2022) வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தற்போது பெயருக்கு ஒரு சில மாடு விட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், கால்நடை துறையினர் இல்லாமல் இந்த வடநாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடதக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments