திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி. இவர் பொது மக்களிடமிருந்து வரும் புகார்களை சரிவர விசாரிப்பதில்லை என புகார் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், ஓபன் மைக்கில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி ஜீப்பை ஆயுதப்படையில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் புகார்கள் சரிவர விசாரிக்காமல் இருக்கும் ஆய்வாளருக்கு எதற்கு ஜீப் என கோபத்துடன் கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பொழுது பொது மக்களின் குறைகள் மற்றும் அனைத்து தகவல்களையும் தனக்கு தெரிவிக்க கைபேசி எண்ணை கொடுத்துள்ளார். அவருக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments