Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

100 சதவீத வாக்களிப்பு : ஆட்சியர் வேண்டுகோள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்று திருச்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் வருங்காலத்தை உங்கள் விரல்களால் நீங்களே எழுதப் போகும் தேர்தல் திருநாள் இதோ வந்துவிட்டது. ஆம் எதிர்வரும் 19.04.2024 வெள்ளிக்கிழமை அன்று மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நீங்கள் அளிக்கும் வாக்கே, நம் நாட்டில் நிகழும் சமூகம் அரசியல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படும் காலமாற்றங்களுக்கு சாட்சியாக அமையும். தேர்தல் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், தேர்தல்களை சுதந்திரமான, நியாயமான வகையில் அதனை நேர்மையாக நடத்துவதற்கும் எங்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் சாட்சியாக இருக்கிறீர்கள். ஆகையால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தமுள்ள 23,03,177 வாக்காளர்களும் தேர்தல் நாளன்று உங்களது குடியிருப்பு அருகில் உங்களது பெயர் பதிவுபெற்றுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாள் ஒருவர் வாக்களித்தால் என்ன? வாக்களிக்காவிட்டால் என்ன? என்கிற அலட்சியம் வேண்டாம். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்யும் உதிரமொட்டுக்கள். மறவாமல் வாருங்கள் வாக்குச்சாவடிக்கு. மேலும், மரியாதைக்குரிய 85+ வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருவதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு 2253 வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில், படிவம் 12D பெற்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை மதித்து அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களது

வாக்குகளை அஞ்சல் வழியாக பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனதினிய முதல் தலைமுறை வாக்காளர்களே! 18 வயது நிரம்பிய எவரும் வாக்களிக்கலாம் என்பது ஏதோ சலுகை அல்ல, இந்த இந்தியதேசத்தை காக்க செய்யும் பொறுப்பு உங்களுக்குமுண்டு! திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40,204இளைய புது வாக்காளர்கள் இருக்கிறீர்கள். அதிக இளைய புது வாக்காளர்கள் உள்ளடக்கிய முதல் பத்து மாவட்டங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பதை உங்களின் மேலான கவனத்திற்குகொண்டு வருகிறேன். உங்கள் வாக்கு தோட்டாவை விட வலிமையானது (Ballot is Stronger thanBullet), வாருங்கள் நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்த உறுதி ஏற்போம். இந்த தேர்தலில்முழுமையாக பங்கேற்று இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழ்ந்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *