தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (05.05.2024) (ஞாயிற்றுக்கிழமை) 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள மாநாட்டு பந்தலில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற உள்ளது.

கவிஞர் வைரமுத்து மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாநாட்டின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழா பேருரையாற்ற உள்ளனர். அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள்,

மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வணிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக விடுமுறை அளித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் மதுரையில் ஒன்று கூட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           34
34                           
 
 
 
 
 
 
 
 

 04 May, 2024
 04 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments