திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலும், கலைஞர் அறிவாலயத்திலும் உள்ள அவரது திருவுரு சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பாஸ்கர், டோல்கேட் சுப்பிரமணி, மத்திய மாவட்ட இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் விஜயா ஜெயராஜ், கருணாநிதி தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் மற்றும் கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்,

துர்கா தேவி, கழக நிர்வாகிகள் கலைச்செல்வி குமரவேல், ராமதாஸ், பி.ஆர் பாலசுப்ரமணியன், புஷ்பராஜ், ஸ்ரீனிவாச பெருமாள், துபேல் அஹமத், கருத்து கதிரேசன் வாமடம் சுரேஷ், கருமண்டபம் சுரேஷ் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments