மதுரை சுப்பிரமணியபுரம் அர்ஜுன தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (25) இவரது மனைவி புவனேஸ்வரி (25) மதுரையில் அருள்குமார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் இந்த நிலையில் புவனேஸ்வரிக்கும் அருள்குமாருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் வேலைக்கு செல்லாமல் அருள்குமார் வீட்டில் இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் அருள்குமாரின் தாய் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரில் உள்ள தனது தம்பி சரவணன் வீட்டில் போய் தங்கி அங்கு ஏதாவது வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையில் அருள்குமார் மாமன் சரவணன் வீட்டில் வந்து தங்கி கடந்த ஒரு மாதமாக துவாக்குடி அருகே உள்ள என் ஐ டி கல்லூரி வளாகத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருள்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் வந்து படுத்து இருந்ததாகவும்
இந்த நிலையில் அருள்குமாருக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வயிற்றுப்போக்கு அதிகமானதோடு வலியும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருள்குமார் வழியில் துடித்து உள்ளார். உடனடியாக சரவணன் அருள்குமாரை துவாக்குடி அரசு மருத்துவமனையில் நல்லிரவு 2 மணிக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள்குமார் சிகிச்சை பலன் இல்லாமல் அதிகாலை 4.45 மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சரவணன் அருள்குமாரின் மனைவி புவனேஸ்வரிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் புவனேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு உடனடியாக இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments