திருச்சி கே.கே நகர் பகுதியில் இயங்கிவரும் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியே இயங்கி வருகிறது.
இதனுடைய மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ஆங்கில ஆசிரியர் டேனியல் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், குழந்தைகள் நல வாரியம் சார்பாக கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவுசெய்து தலைமறைவான ஆசிரியர் டேனியலை தேடிவருகின்றனர்.
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர் அவரை கைது செய்து அ பணியிடை நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments