விஜய் குறித்து கேட்ட போது உங்களுக்கே நகைச்சுவையாக தெரியல-திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் ஒரு வாரத்தில் இணையும் என நேற்றுதான் கூறியிருந்தேன். அதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா எஞ்சின் என முதலமைச்சர் கூறியுள்ளார் தேர்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின் எது டப்பா எஞ்சின் எது வந்தே பாரத் இன்ஜின் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக கூட்டணியே மக்கராக இருக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். காங்கிரஸ் ஒரு மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பார்களா மக்கர் இன்ஜினாக போகுமா? என்பது தெரியாது.
திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான் அதற்கு ஏன் தணிக்கை சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும் அந்த படத்திற்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments