முத்தமிழ் அறிஞர் கலைஞர் கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு. எனவே தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தை திருக்குறள் வார விழா மாதமாக வள்ளுவரை போற்றும் விழாவாக திருவள்ளுவரை திருக்குறளை கொண்டாடும் விழாவாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.
அந்த அடிப்படையில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமரன் எழுதிய “உலகாளும் வள்ளுவமே ” பாடலை பள்ளிக் கல்வி அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று காலை வெளியிட்டார்கள். பாடலை இசைவாணன் என்கிற ஆகாஷ் பாடியுள்ளார். ஸ்டாரி இசையமைத்துள்ளார்.
பாடல் இணைப்பு காணொளியில் வெளியிடப்பட்டது கடந்த செப்டம்பர் மாதம் “பனங்காடையின் பாடல்கள் ” என்கின்ற மக்களிசை விழிப்புணர்வுப் பாடல் தொகுப்பை பள்ளிக் கல்வி அமைச்சர் வெளியிட்டார்.
அத்தொகுபில் உள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்பாடல் நுங்கு வண்டிக்காரன் வலையொளியில் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments