தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் மூன்று இந்தியக் கல்வியாளர்கள், “nagalangue.ai” எனும் புதுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கல்வித் தீர்வுக்காக, Chula–ASEMLLL செயற்கை நுண்ணறிவு சார் 2025–2026 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் இரண்டாம் பரிசை வென்று, இந்திய நாட்டிற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழா 2026 பிப்ரவரி 2ஆம் நாள் தாய்லாந்தின் பாங்காக்கில் அமைந்துள்ள Chulalongkorn பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழா, ASEM Lifelong Learning Hub Regional Centre for South Asia உடன் இணைந்து நடத்தப்பட்டது. “செயற்கை நுண்ணறிவுடன் நிலைத்த எதிர்காலத்திற்கான கற்றல்”. என்ற பொருண்மையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் கல்வியை மையமாகக் கொண்டு, உள்ளடக்கிய, நிலைத்தன்மை கொண்ட, தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் தீர்வுகளை முன்னிறுத்துகிறது.
உலகம் முழுவதும் இருந்து பங்கேற்ற புதுமையாளர்களுடன் போட்டியிட்டு, பொருத்தம், புதுமை, மற்றும் சமூகத் தாக்கம் ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்கிய இத்திட்டம், AI-Powered Education Global Award பிரிவில் இரண்டாம் பரிசைப் பெற்றது.
பாராட்டுப் பெற்ற ஆராய்ச்சியாளர்கள்:
முனைவர் பி.சண்முகசுந்தரி,எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், திருச்சிராப்பள்ளி, முனைவர் ஆர். வசந்தன், நாகாலாந்து மத்திய பல்கலைக்கழகம்,
கோஹிமா, முனைவர் ஜெ.கார்த்திகேயன், தேசியக் கல்லூரி, திருச்சி.
இந்த சாதனை, உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பை வெளிப்படுத்துவதோடு, நிலைத்த எதிர்காலக் கல்வியை மாற்றியமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் முக்கியப் பங்கையும் வலியுறுத்துகிறது.
விருது பெற்ற ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், இந்த வெற்றியைப் பெருமையுடன் பாராட்டி,
இது மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments