Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் பார்வைத் தூரம் குறைந்து, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம் செல்லும் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, அதிகாலை நேரங்களில் குளிர் மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பதால் பனி மூட்டம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களிலும் இதேபோன்ற நிலை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது, இந்நிலையில் மேலும் தமிழகத்தில் இரண்டு நாட்கள் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை பனிமூட்டம் நிலவியது

இதில் திருச்சி மாவட்டம் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் ஆளுந்தூர் நாகமங்கலம் பகுதியில் காலை 9:00 மணியை கடந்தும் பனிமூட்டம் நிலவியது இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *