Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிப்ரவரி 12 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் -திருச்சியில் ரயில் மறியல் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் திரளாக பங்கேற்க முடிவு

திருச்சி மாவட்ட ஏஐடியுசி நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் வே.நடராஜா தலைமையில் பிப்ரவரி 3 காலை 11:00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் பொருளாளர் ராமராஜீ துணைத் தலைவர்கள் சிவா, செல்வகுமார் செயலாளர் அன்சர்தீன் பெல் தொழிற்சங்க செயலாளர் லோகநாதன், கைலாஷ்நாத் தரைக்கடை சங்க துணைத் தலைவர்கள் சுரேஷ் முத்துசாமி, சொக்கி சண்முகம் ஊரக வளர்ச்சித்துறை சங்க செயலாளர் கனகவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிப்ரவரி 12 பொதுவேலை நிறுத்தம்- மறியலில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கைதாக முடிவு

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாய முன்னணியின் சார்பாக ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர்விரோத நான்கு சட்ட தொகுப்புகள், தொழிலாளர் கொள்கை (ஷ்ரம் சக்தி நிதி), மக்கள் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் மீது மேற்கொள்ளப்படும் பல் முனை தாக்குதல்களுக்கு எதிராக 2026 பிப்ரவரி 12 நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி மக்கள் மத்தியிலும் தொழிற்சாலையில் வாயில்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது. திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் மற்றும் திருவரங்கம் ரயில் நிலையத்தில் மறியல் மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறும் மறியல் போராட்டங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் பங்கேற்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *