Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பட்டப்பகலில் வீட்டுக்குள் கத்திக்குத்து தாக்குதல் – திருடனை பிடித்து பொதுமக்கள் கட்டி வைத்தனர்

திருச்சி வயலூர் ரோடு வாசன் வேலி குடியிருப்பு பகுதி 25வது கிராஸ் வயதான தம்பதியினர் வீட்டில் இருந்துள்ளனர் அந்த பகுதி முழுவதும் தனித்தனி வீடுகளாக இருக்கும் வேலைக்கு செல்லும் மகன் மகள் உள்ளிட்டோர் சென்றுவிடும் நிலையில் பட்டப்பகலில் முதியவர்கள் மட்டும் அங்கே இருப்பார்கள் என்று நோட்டமிட்டு திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான்

வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினர கட்டிவைத்து
பட்டபகலில் கத்தியால் குத்தி உடல் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் அவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. திருடன் அதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீட்டில் கொள்ளை அடிக்கவும் அவர்களை துன்புறுத்தி நகை பணங்களை கேட்டும் தாக்கியுள்ளான்.

அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து செம கவனிப்பு கவனித்தனர். உடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *