Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மத்திய மண்டலத்தில் 9 மாவட்டங்களில் 789 மொபைல் காணாமல் போனதாக புகார்கள் – காவல்துறை துரித நடவடிக்கை

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன், அவர்கள் அறிவுறுத்தலின்படி திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் தொலைபேசிகள் காணாமல் போனதாக ஜனவரி மாதத்தில் திருச்சி 90, புதுக்கோட்டை 14, கரூர் 74, பெரம்பலூர் 99, அரியலூர் 62, தஞ்சாவூர் 258, திருவாரூர் 60, நாகபட்டினம் 67 மற்றும் மயிலாடுதுறை 65 மொத்தம் 789 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

அதன் விபரங்களை CEIR Portal மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு 333
புகார்தாரர்களில் முறையே திருச்சி 38, புதுக்கோட்டை 4, கரூர் 29, பெரம்பலூர் 42, அரியலூர் 25, தஞ்சாவூர் 101, திருவாரூர் 23, நாகபட்டினம் 39 மற்றும் மயிலாடுதுறை 32 ஆகிய மாவட்டங்களில் தொலைந்து போன கைப்பேசிகள் கண்டறியப்பட்டது, அவைகளில் 81 கைப்பேசிகள் முறையே திருச்சி 12, புதுக்கோட்டை 4, கரூர் 8, பெரம்பலூர் 24, தஞ்சாவூர் 11, திருவாரூர் 1, நாகபட்டினம் 6 மயிலாடுதுறை 15 கைப்பற்றப்பட்டு சம்மந்தப்பட்ட மற்றும் மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 18 கைப்பேசிகள் அதாவது அரியலூர் மாவட்டத்தில் 10, தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 ஆகியவை சம்மந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.
மேலும் 234 மனுதாரர்களின் கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

உடனே அவற்றை பறிமுதல் செய்திடவும் மற்றும் நிலுவையில் உள்ள 456 புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை
வழங்கியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *