இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஆயத்தத்தில்,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றம் – தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
(Environment and Climate Change Initiatives in Tamil Nadu) என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கு
06.02.2026 (வெள்ளிக்கிழமை) இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், அரசின் சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன் அவர்கள் துவக்க உரை வழங்கி, சுற்றுச்சூழலை பாதுகாப்பது இன்றைய இளைஞர்களின் கடமையாகும் என்றும், கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, காலநிலை மாற்றம் எதிர்கால தலைமுறைக்கு பெரும் சவாலாக உள்ளதாகவும், அதனை அறிவியல் சார்ந்த அணுகுமுறையால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் நிகழ்ச்சி முன்னோட்ட உரை வழங்கி, இந்த பயிலரங்கின் நோக்கங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

இந்த பயிலரங்கின் முதன்மை விருந்தினராக (Chief Guest)
முனைவர் கு. முத்துக்குமார், திட்ட அலுவலர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, சென்னை, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் சவால்கள், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள், மற்றும் இளைஞர்களின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நிலையான வளர்ச்சியை அடைவதற்கு மாணவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் வளப்பேச்சாளர்களாக
திரு. ஜி. ஜமீல் அஹமத், தகவல் தொழில்நுட்ப அலுவலர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, சென்னை,
திரு. சி. பாலகிருஷ்ணன், கிரீன் ஃபெலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி,
ஆகியோர் கலந்து கொண்டு, தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடைமுறைகள் குறித்து விளக்கினர்.

இந்த பயிலரங்கில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் மருந்தியல் (Pharmacy), செவிலியியல் (Nursing), இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் (BNYS) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பங்கேற்று மிகுந்த பயன் பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments