திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற மோரணி மலை உள்ளது. இந்த மழை அடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலும், மலையின் தென் புறத்தில் மலை நாச்சி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. மலை உச்சியில் கார்த்திகை, பௌர்ணமி காலங்களில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த மலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மேற்கு புறத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழே சரிவது போன்று மிகப்பெரிய ராட்சதக் பாறை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையின் கிழக்கு புறத்தில் ராட்சத பாறாங்கல் ஒன்று மலை உச்சியில் இருந்து சரிந்து விழுந்தது.
இதில் கற்கள் பல துண்டுகளாக சிதறி கிடக்கிறது. அதிலும் ராட்சதக்கல் மலை அடிவாரத்தில் உள்ள மரங்களில் சிக்கி அதற்கு கீழே இறங்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலையை சுற்றி பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதன் அருகாமையில் துவக்கப்பள்ளி ஒன்றும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments