சென்னையில் இருந்து மினி சரக்கு வாகனத்தில் அரசுடைமை வங்கியின் 5 ஏடிஎம் மிஷின்களை ஏற்றிக்கொண்டு சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் மற்றும் அவருக்கு உதவியாளர்களாக சென்னையைச் சேர்ந்த அருள் 38,சற்குணம் 38 ஆகிய மூன்று பேரும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அதிகாரம் பிரிவு சாலை அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட மூவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
மேலும் அவர்கள் ஏற்றி வந்த ஐந்து ஏடிஎம் மிஷின்களும் சாலையில் கவிழ்ந்தது. இதில் ஏடிஎம் மிஷின்கள் உடைந்து சேதம் அடைந்தது. துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments