இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து விட்டது. விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. இன்னும் கூட்டணிகள் தொகுதி பங்கீடு என் டி ஏ பக்கம் இறுதியாகாத நிலையில் தவெக வருமா வராதா என்று ஏராளமான தகவல்களை மட்டும் ஊடகத்தில் பேசுபவர்கள் மட்டும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் தன்னுடைய அரசியல் பயணத்தை நீண்ட நெடிய காலம் கொண்டு செல்ல ஆழமான அஸ்திவாரத்தில் உருவாக்கி இந்த தேர்தலை தனியாக சந்திப்பது என முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமானோர் கருத்துகளை குறிப்பிட்டு வரும் நிலையில் வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள் வேட்பாளர்கள் பரப்புரைக்கு வரமாட்டார்கள் தமிழக வெற்றிக்கழகம் அறிவிக்கும் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளை சமாளிப்பார்களா என்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் நம்பகமான, உறுதியான வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேர்வு செய்து தளத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று தமிழக வெற்றி கழகத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருவதாக குறிப்பிடுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் சிபிஐ விசாரணையை தமிழக வெற்றி கழக தலைவர் முடித்துவிட்டு தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் இறங்கி ஒரு கை பார்த்து விடுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறராம். அவர் கண்டிப்பாக என்டிஏ கூட்டணிக்கு செல்ல மாட்டார் அந்த முடிவை யாரும் எடுக்கவும் இல்லை என்று தவெக முக்கிய பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதை விட முக்கியம் அவர்களுடைய தேர்தல் எழுச்சி மாநாடு திருச்சியில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய்து விட்டனர். 200 ஏக்கர் பரப்பளவில் அதற்கான மாடலை ரெடி செய்து 234 வேட்பாளர்களையும் அமர வைத்து அறிமுகம் செய்து தேர்தல் முழு வாக்குறுதிகளையும் அறிவித்து மக்களின் செல்வாக்கை மேலும் பெற திட்டத்தை தீட்டி விட்டனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில் மாநாட்டை இங்கே நடத்தி 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கப் போகிறார் என நிர்வாகிகள் உச்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.

அவர் உறுதியாக இருக்கிறார் கூட்டணிக்கு செல்ல மாட்டார் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் அதற்கான களப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பதால் அவரவர்களுக்கு தோணும் கருத்துக்களை ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் யாரும் எதிர்பாராத அளவில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் குறிப்பிடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments