Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஆட்சியரகத்தில் வாக்கு விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் எப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், நாடு முழுவதும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ரங்கோலி கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் உதவி ஆட்சியர் சேஷத்ரிமயும் தீபி சானு, மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் இருந்தும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு, “என் வாக்கு என் உரிமை” “100% வாக்குபதிவு” என்ற வாசகங்கள் அடங்கிய பல வண்ணக் கோலங்களை வரைந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *