திருச்சி, பொன்மலை பகுதியிலுள்ள G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) அமைப்பதற்கான முயற்சி மேற்கொண்டபோது, முதல் சந்திப்பிலேயே “அதற்கான இடம் இரயில்வே நிர்வாகத்திடம் இருப்பதால் அவ்விடத்தைப் பெற்றுத் தந்தால், நிச்சயமாக உயர்மட்ட சுழற்பாலம் அமைத்துத் தருவோம்” என்று ஒப்புதல் அளித்து, உறுதிமொழி வழங்கியதோடு, எனது முயற்சிக்கு முழு ஆதரவும் அளித்தவர் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள்.
அதன்படி, நான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளால், இரயில்வே துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து, தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்றேன். தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையால் 94 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் டெண்டர்கள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இன்று (18.03.2026) மதியம் 2 மணியளவில், புது தில்லியிலுள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்தேன். அப்போது அவருக்கு பட்டாடை அணிவித்து, தமிழ்நாட்டு இனிப்பு வகைகளை வழங்கி, திருச்சி தொகுதி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்தேன். அவர் எனது நன்றியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
நூற்றுக்கணக்கான உயிர்களை காவுவாங்கிய கருப்பு பகுதியான (Black spot) திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற்பாலம் அமைக்கப்பட்ட பின்னர்,
ஒரு உயிரும் பறிபோகாது என்ற நம்பிக்கையுடன், எனது மக்கள் பணியின் ஒரு முக்கிய நிறைவை அடைகிறேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments