Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குதூகலத்துடன் குளத்தில் உற்சாக குளியல்போட்ட அகிலா

திருச்சியில் கோடைவெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய தினம் 97 டிகிரி வெப்பம் பதிவானநிலையில், வரும் நாட்களில் வெயில் சதமடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகரமக்கள் தற்போதே கோடைவெயில் தாக்கத்தினால் மற்றும் புழுக்கத்தினால் பெரும்இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

மக்களை கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திணறிவரும்நிலையில் விலங்குகள் நிலை எம்மாத்திரம்…. இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் கோடைவெயிலால் சிரமப்படுகின்றன.

திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் திருவானைக்கோவில் யானை அகிலா, கோடைவெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், வெயிலை சமாளிக்கவும் எதுவாக திருக்கோவில் வளாகத்தில் யானைக்காக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் உடலை மூழ்கி குளித்தும், தண்ணீர் பம்ப்பில் பாய்ந்துவரும் தண்ணீரை பிடித்து உடலில் பீய்ச்சி அடித்துக்கொண்டும், ஷவரில் உற்சாகமாக குளித்தும் உடலை குளிர்வித்துக் கொண்டு, வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொண்டு மகிழ்ச்சியடைந்தது.

பொதுவாக யானைகள் என்றால் குழந்தைகள் தான் மகிழும், ஆனால் இங்கு யானை குளித்து மகிழ்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொலைபேசியிலும், கண்களிலும் ஒளிப்பதிவு செய்து மகிழ்ந்தனர்.

அதே நேரம் திருக்கோவில் நிர்வாகம் சார்பில், திருக்கோவில் யானை அகிலாவுக்கு கோடை வெயிலுக்கு ஏற்ற வகையில் தர்பூசணி மற்றும் வெள்ளரி பழங்கள் வழங்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *