திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான சைபுல்லா, நவீன் மற்றும் சமீர் ஆகியோர், திருச்சி காந்தி மார்க்கெட் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் இந்தச் சட்டவிரோத செயலை அந்தப் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சாதிக் பாஷா என்பவர் கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, போதையில் இருந்த இந்த ரௌடிகள், மெக்கானிக் சாதிக் பாஷாவா தாக்க முயன்றுள்ளனர்.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, ரம்ஜான் பண்டிகை அன்று சாதிக் பாஷாவைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய இந்த கும்பல் முயன்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று சாதிக் பாஷாவைக் குறிவைத்து அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் சாதிக் பாஷாவின் வீட்டுக்கு அருகில் அருகில் உள்ள அஸ்லாம் என்பவரது வீடு சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சைபுல்லா, சமீர் மற்றும் அவர்களது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments