என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் என்னை பாராட்ட வா செய்வார்கள் -திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி.வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் அந்த இடத்தை திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே என் நேரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு.மார்ச் 31 ஆம் தேதி இரவு தமிழக முதல்வர் திருச்சி வந்து இரவு தங்குகிறார். ஏப்ரல்1ஆம் தேதி அன்று காலை 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் குற்றச்சாட்டை முன் முன் வைக்கிறார் என்ற கேள்விக்கு எதிர்த்து நிற்கிறவர் யாரும் பாராட்டி பேசுவதில்லை. உண்மை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.
தேர்தல் நிக்கிறவர் தோற்போம் னா சொல்வார் இபிஎஸ். உண்மையிலேயே தளபதி தான் ஜெயிப்பார். மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கை தந்துள்ளார். இரண்டாவது முறையாக திமுகவிருக்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் மீண்டும் இரண்டாவது முறை திமுகவிற்க்கு வாய்ப்பு தருவார்கள். டெல்டாவில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும்.

தவெக தலைவர் விஜய் திருச்சியில் போட்டியிடுவதால் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு
திமுக யாரையும் கண்டு அச்சப்படவில்லை.
தேர்தலில் எல்லாரும் போட்டி போட முடியும். அது ஒன்னும் பிரச்சனை இல்ல. நாங்க எங்கள் வேலையை முதல்வர் செய்துள்ள திட்டங்களை மக்களிடம் சேர்ந்தால் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் என்னை பாராட்ட வா செய்வார்கள்?- அமைச்சர் நேரு



Comments