திராவிட மாடல் ஆட்சியின் நற்சான்று உதாரணமாக மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்

ஆ மு மு க கட்சியில் இருந்து விலகி கார்த்திக் அவர்களும், ராம்குமார் அவர்களும் தங்களை அதிகாரப்பூர்வமாக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.கழகத் தலைவரின் சீரிய தலைமையில், அமைச்சரின் வழிகாட்டுதலின்படி கழகத்தின் வளர்ச்சிக்கும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக இணைந்த நிர்வாகிகள் உறுதி ஏற்றனர்.

புதிதாக கழகத்தில் இணைந்த கார்த்திக் மற்றும் ராம்குமார் ஆகியோரை அமைச்சர் அவர்கள் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வின் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்



Comments