Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பாலம் பழுது பணி தொடக்கம்-திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி – மேலூர் – மதுரை சாலையில் உள்ள கோரையாறு உயர்மட்டப் பாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், ஏப்ரல் 3, 2026 காலை 9 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் நடைபெறும் காலத்தில், மேலூர் பகுதியில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கி வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பஞ்சப்பூர் – செட்டியப்பட்டி – எடமலைப்பட்டி புதூர் – கிராபட்டி – அரிஸ்டோ பாலம் வழியாக மாற்றி இயக்கப்படும்.

அதேபோல், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கமான மாற்றுப்பாதையான மத்திய பேருந்து நிலையம் – அரிஸ்டோ பாலம் – மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *