திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மார்ச் 31, 2026 (செவ்வாய்க்கிழமை) ‘ட்ரை டே’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL3AA, FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபான விற்பனை முழுமையாக நிறுத்தப்படும்.

அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதும், மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31 ‘ட்ரை டே’ அறிவிப்பு – திருச்சியில் மதுபான விற்பனைக்கு முழு தடை



Comments