Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

யார் இந்த ராஜசேகரன்?

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் ஜி. ராஜசேகரன், கல்வி, தொழில் மற்றும் சமூக சேவைகளில் நீண்ட காலமாகச் செயல்பட்டு பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார்.
திருச்சியில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இந்திரா கணேசன் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்து, பல கல்வி நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர் தலைமையில், இந்திரா கணேசன் இன்ஜினியரிங் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருந்தியல் மற்றும் மருத்துவ அறிவியல் கல்லூரிகள், சித்த மருத்துவ கல்லூரி, இணை சுகாதார அறிவியல் பள்ளி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.

கல்வித்துறையில் இவரின் பங்களிப்பை முன்னிட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும், துணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தனியார் கல்வி நிறுவனங்களின் பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.தொழில்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள ராஜசேகரன், திருச்சிராப்பள்ளி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட “யூத் ஐகான்” விருதும், 2006 மற்றும் 2010–2013 காலகட்டங்களில் TEXMO நிறுவனத்தின் சிறந்த தொழிலதிபர் விருதுகளும் பெற்றுள்ளார்.

சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளையின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில கிளையில் வழிகாட்டி குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி எலீட் முன்னாள் தலைவராகவும், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட 3000இல் உதவி ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். TRY அறக்கட்டளையின் ஆலோசகராகவும் உள்ளார்.
இதனுடன், தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராகவும், திருச்சிராப்பள்ளி சுயநிதி ஆசிரியர் பயிற்சி சங்கத்தின் செயலாளராகவும், அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், தமிழ்நாடு தனியார் தொழில்முறை கல்லூரிகள் சங்கத்தின் சுகாதார அறிவியல் பிரிவில் இணைச் செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

கல்வி, தொழில் மற்றும் சமூக சேவைகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஜி. ராஜசேகரன், திருச்சி மாவட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதுடன், கல்வி துறையில் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *