Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விஜய் போட்டியிடும் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதல்வர் திடீர் நடைபயணம் – வாக்கு சேகரிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 9:30 மணிக்கு உழவர் சந்தை மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் இதற்காக நேற்று இரவு திருவாரூரில் இருந்து திருச்சி அந்த அவர் இன்று காலை திருச்சி காந்தி

மார்க்கெட் பகுதியில் திடீர் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு அங்கு உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு சென்றார்.இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே என் நேரு,மகேஸ் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்


அவர் பரப்புரை மேற்கொண்ட
காந்தி சந்தை ,பிரபாத் ரவுண்டானா பகுதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் என என்பது குறிப்பிடத்தக்கது.இதே தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில், அவர் நாளை (ஏப்ரல் 2) மதியம் மரக்கடை பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *