Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உறையூர் ஐஷ்வர்யா மருத்துவமனை நடத்தும் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

திருச்சி உறையூரில் அமைந்துள்ள ஐஷ்வர்யா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பெண்களின் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கான ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் இந்த முகாமில் வழங்கப்படுகின்றன.

முகாமில் மகப்பேறு, நுரையீரல் நோய், புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக பாதை உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பை மற்றும் சினைப்பை தொடர்பான நோய்கள், நுரையீரல் பிரச்சினைகள், காசநோய், ஆஸ்துமா, மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.மேலும், கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் Colposcopy பரிசோதனைக்கு 20% சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த முகாம் உறையூர், வாத்துக்கார தெரு, சாலைரோடு ஹவுசிங் காலனியில் உள்ள ஐஷ்வர்யா மருத்துவமனையில் நடைபெறும். முன்பதிவுக்கு 0431-4000969, 2761476, 94422 39476 ஆகிய எண்ணங்களில் தொடர்புகொள்ளலாம்.
பெண்கள் தங்கள் உடல்நலனை கவனிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *