திருச்சியில் நாளை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் TVK தேர்தல் பொறுப்பாளர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆலோசனை.திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஏப்ரல்

இரண்டாம் தேதி நாளை திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதன் தொடர்ச்சியாக காந்தி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி தமிழக வெற்றிக்கழக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு ப. கிருஷ்ணன் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில்

மனு அளித்தனர். அதன் பின்னர் காந்தி மார்க்கெட் பகுதியில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கு.ப.கிருஷ்ணன் பேட்டி அளித்தார்… அதில்.TVK தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை திருச்சிக்கு வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார்.

விஜய் ஏன் இரண்டு தொகுதியில் போடுகிறார் என்று எனிக்கோ இருதயராஜ் கேட்கிறார். இரண்டு தொகுதியில் போட்டியிடுவது எங்கள் விருப்பம். 23 கூட்டணி இல்லாமல் திமுக தனித்து நின்றால் எங்கள் தொண்டர்களே திமுகவை எதிர்த்து போட்டியிடுவார்கள்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன் அளித்த பேட்டியில்.இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வாடிக்கையான ஒன்று. ஜெயலலிதா இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் காலத்தில் நிற்பவர்கள் இரு தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். தேர்தலில் போட்டி போடுவதற்கு ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஜெயலலிதா நான்கு இடத்தில் போட்டியிட்டார்கள்.விஜய் நாளை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பொதுக்கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெறும். பொதுக் கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் மே 4ம் தேதி 11 மணிக்கு TVK வெற்றி பெற்று பெற்றது என்ற வரலாறு படைக்கும் நாளாக அதனால் அமையும். திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம். காவல்துறை, அரசு நிர்வாகம், வருவாய் துறை, தேர்வாணையம் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ அதனை முழுமையாக அளிப்பதாக உத்திரவாதம் தரப்பட்டிருக்கிறது.திமுக அதிமுக 200 இடங்கள் வெற்றி பெறுவோம் என கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு.திமுக 200, அதிமுக 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கர்நாடகத்திற்கு தான் போக வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments