Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“ஒற்றுமையே வெற்றியின் ரகசியம்” – அமைச்சர் கே.என்.நேரு

ஒற்றுமையே வெற்றியின் ரகசியம் – திருச்சியில் நடந்த அனைத்துக்கட்சிகூட்டத்தில் கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி,எஸ்டிபிஐ, மக்கள் நீதி மையம், முக்குலத்தோர் புலிப்படை மற்றும் ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவதற்காகவும், வேட்பாளர்களை ஒருங்கிணைக்கவும் அனைத்துக்கட்சிக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என் நேரு, திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ்,

லால்குடி தொகுதி வேட்பாளர் பாரிவள்ளல்,
மணப்பாறை தொகுதி வேட்பாளர் அப்துல் சமது, ஸ்ரீரங்கம் தொகுதி துரைராஜ், மண்ணச்சநல்லூர் தொகுதி கதிரவன் உள்ளிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் பட்டியலைப் பெற்றுக்கொண்டு அந்தந்தப் பகுதி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் தற்போதைய தேர்தல் களத்தில் பிரபல நடிகர்களும், பெரும் செல்வந்தர்களும் வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். இத்தகைய சவாலான சூழலில், நடுத்தர மற்றும் சாதாரண நிலையில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, மிகுந்த ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்றார்.
“ஊர் கூடித் தேர் இழுப்பது போல” அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஏதேனும் குறைகள் இருப்பின் நிர்வாகிகள் நேரடியாகத் தொடர்புகொண்டு சரிசெய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசுகையில்.இன்று முதல் சரியாக 20 நாட்கள் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் எனவும், உழைப்பையும் சிந்தனையையும் தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.திருச்சி என்று சொன்னாலே ஒன்பதுக்கு ஒன்பது, நூற்றுக்கு நூறு என்று

முதலமைச்சர் அடிக்கடி கூறுவதை இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றார்.வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக்
கட்சிகள் அனைத்தும் முழு ஒத்துழைப்பையும், கடின உழைப்பையும் தந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *