திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த,
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்,
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கி வரும் கல்வியாளர்,
ரெட் கிராஸ் மூலம் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வரும்
மற்றும் அ.இ.அ.தி.மு.க கட்சியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும்
Er. க. ராஜசேகரன் அவர்களுக்காக இந்திரா கணேசன் லயன்ஸ் கிளப் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வரவிருக்கும் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில்
அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் Er. க. ராஜசேகரன் அவர்கள்
மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்
இந்த சிறப்பு பூஜை திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் கிளப் லயன் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.
மக்கள் நலனும், தொகுதி வளர்ச்சியும் அவரது முதன்மை இலக்காக உள்ள நிலையில்,
அவரது வெற்றி மற்றும் மக்கள் சேவை மேலும் சிறக்க வேண்டி
ஆலயத்தில் விசேஷ பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வை லயன் தலைவர் டாக்டர் மு. அனுசுயா,
செயலாளர் டாக்டர் கே. சித்ராதேவி,
பொருளாளர் டாக்டர் பி. ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில்
லயன் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.

இதில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு
ஒருமனதாக பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments