Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி பழைய மதுரை சாலையிலுள்ள கிழக்கு தொகுதியில் திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம்
தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் என்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, பின்னர் மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார் தவேக தலைவர் விஜய். விமான நிலையத்தில் அவருக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய விமான நிலையத்திலிருந்து வரும் பொழுது பாலக்கரை சுரங்கப்பாதையில் அவரது வேனுக்கு முன்னதாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலை ஓரமாக தண்ணீர் வடிந்து பாசி பிடித்து இருந்ததில் வழுக்கி விட்டு விழுந்து விட்டனர்.

உடனடியாக விஜய் வேனை விட்டு கீழே இறங்கி அவர்களை காயம் ஏதும் ஏற்பட்டு விட்டதா என கேட்டறிந்து ஜாக்கிரதையாக செல்லுங்கள் எனக் கூறிவிட்டு அன்பு முத்தம் தெரிவித்து மீண்டும் வேனில் புறப்பட்டு சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *