திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பைச் சேர்ந்த வணிகப் பெருமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, வர்த்தகர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, தமிழக அரசின் சாதனைகளையும், வணிகர் நலன் சார்ந்த திட்டங்களையும் எடுத்துரைத்து வாக்குகள் சேகரிக்கப்பட்டன.
நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பின்வரும் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர்
வி. கோவிந்தராஜூலு தமிழ்ச்செல்வன் – பேரமைப்பு நிர்வாகிகள்
ஸ்ரீதர் – மாவட்டத் தலைவர்
செந்தில் பாலு – மாவட்டச் செயலாளர்
தங்கராஜ் – மாவட்டப் பொருளாளர்
கண்ணன் – தலைவர்
ஏ ஒன் ஆறுமுகம் – மாநகரச் செயலாளர்
ஜானகிராமன் – மாநகரப் பொருளாளர்
மேலும், பேரமைப்பின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டவர்களிடம், உதயசூரியன் சின்னத்திற்குத் தங்களது முழு ஆதரவை வழங்குங்கள் என கேட்டுக்கொண்டார்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments