திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரன் பாலக்கரையிலுள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம் 2ல் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்… திருச்சி கிழக்கு தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்பதை நாங்கள் பரப்புரை மேற்கொண்ட பொழுது வாக்காளர்களை உங்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடிய அலுவலகத்திலேயே முறையான அடிப்படை வசதிகள் இல்லை உள்ளே துர்நாற்றம் வீசுகிறது அலட்சியமான அரசாங்கம் நடக்கிறது என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்.

2011 இல் இருந்து 2021 வரை அதிமுக ஆட்சியில் ஆஸ்பத்திரி கூட கமகமவென வாசனையாக இருந்தது. மக்கள் விரோத பயனற்ற ஆட்சியை தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் கிழக்கு தொகுதியில் 100% இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் முதன்மையானவராக சட்டமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அவர் கட்சியில் இருக்கலாமா வேண்டாமா என்ற நிலையில் இருந்தவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் ரோட்டில் இறங்கி போராடினார் என்றால் அவர் தான் இனிகோ. ஒரு சட்டமன்ற உறுப்பினரை ரோட்டில் இறங்கி போர வேண்டிய நிலையில் தான் இந்த அரசு உள்ளது.
ஜோசப் விஜய் பனையூரில் முடங்கி கிடப்பார்.
பெரிய உங்களுடைய கல்யாணம் காதுகுத்து வளைகாப்பு இவைகளுக்கு தான் செல்வார் விஜய். அரசியலமைப்பு சட்டம் சொல்வதால்தான் நேரில் அவர் இங்கு வந்து இரண்டாவது தொகுதியாக கிழக்கில் வேட்ப மூன்று தாக்கல் செய்தார் இல்லையென்றால் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பார். அவருக்கு ஓட்டு போட்டால் அவரை எங்கே சென்று பார்ப்பது என மக்கள் சிந்திப்பார்கள். அவர் இங்கே வர வேண்டும் என்றால் அவருக்கு தனி விமானம் தேவைப்ப டுகிறது.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*



Comments