Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைதியான சேவை-உறுதியான பயணம்- திமுக வேட்பாளர் பாரிவள்ளல்

திருச்சி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் – சமூக சேவையால் அறியப்பட்டவர்.திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவள்ளல், கட்சி மற்றும் சமூக சேவையும் ஒருங்கிணைந்தவர் என அறியப்படுகிறார் பாரிவள்ளலின் தந்தை தங்கவேல் உடையார்

மயிலம்பாடியை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் சிறுவயது முதலே திமுக கட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதேபோல், பாரிவள்ளல் மற்றும் அவரது சகோதரர்களும் சிறுவயதிலேயே திமுகவில் இணைந்து கட்சிப்

பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் குடும்பமே முழுவதும் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.1960ஆம் ஆண்டு லால்குடியில் தங்கவேல் உடையார் உரக்கடை நடத்தி வந்தார். பின்னர் அந்த வணிகத்தை அங்கு பணியாற்றியவர்களிடம் ஒப்படைத்து, திருச்சிக்கு இடம்பெயர்ந்தார். 1987ஆம் ஆண்டு கட்டப்பட்ட வணிக வளாகத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1997ஆம் ஆண்டு ஹோட்டல் நிறுவி, அதை வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.பாரிவள்ளல் கட்சியில் பெரிய பதவிகள் வகிக்காதபோதிலும், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சிச் செயல்பாடுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளார். அதேசமயம், கோயில்களுக்கு நன்கொடை வழங்குதல், சுற்றுப்புற மக்களின் அவசர தேவைகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.மேலும்,

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவி செய்வதிலும் பாரிவள்ளல் முக்கிய பங்கு வகித்து வருகிறார். தற்போது உயர்ந்த நிலை மற்றும் பொறுப்புகளில் இருந்தாலும், உதவி பெறும் மாணவர்களின் விவரங்களை வெளிப்படுத்தாமல் அமைதியாக தனது சேவையை தொடர்ந்து செய்து வருவது அவரின் தனித்துவமாகும்.தற்போது கூட மயிலம்பாடி மற்றும் ஊட்டத்தூர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://www.threads.net/@trichy_vision
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *