Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொன்மலை சந்தை – தீர்வு தருவோம் என ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்குறுதி

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை சந்தை திருச்சி மாவட்டத்தில் முக்கியமான சந்தையாக கருதப்படுகிறது. இந்த சந்தை வாரந்தோறும் ஞாயிறு அன்று மட்டும் செயல்படுகிறது. இந்த சந்தையை மக்கள் தங்கள் அன்றாட வாழ்கைக்கு தேவையான பொருட்களை வாங்க விற்க பயன்படுத்துகின்றனர் அதனால் அங்கு வாழும் மக்கள் அந்த சந்தையில் தங்கள் பொருட்களை விற்கும் வியாபாரிகளாகவும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாகவும் சென்று வருகின்றனர் (காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக

விற்பனை செய்யப்படுகிறது விலை குறைவாகவும் உள்ளது. இதனால் அந்த இடத்தில் மக்கள் கூட்டம் வெகுவாக கூடுகிறது.
இந்த ஆளும் அரசு வியாபாரிகளிடமிருந்து பணம் வாங்கியும் அந்த சந்தையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை. குடிநீர் வசதி,கழிப்பறை வசதி எதுவும் செய்யப்படவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போதுமான
நிழற்குடை வசதி செய்து தரப்படவில்லை. மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள எல்லா இடமும் குப்பையாகவும் மற்றும் அதன்

சுற்றுப்பகுதி அசுத்தமானதாகவும் உள்ளது
அங்கு வரும் மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலும்,வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தாலும் அருகில் சுகாதார நிலையமோ,மருத்துவமனையோ இல்லை.
மக்களிடம் போதுமான அளவுக்கு காசு வாங்கும் இந்த அரசுக்கு மகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியவில்லை.என்று பல கோரிக்கைகளை வைத்தனர் நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளர்


ஜல்லிக்கட்டு ராஜேஷ் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அனைத்து குறை மற்றும் கோரிக்கைகளையும் சரி செய்து மற்றும் இந்த சந்தை நவீனமயமாக்கப்டும் என்றும் உறுதி அளித்தார்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision

*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *