திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி யாரோ ஒருவர் ஓட்டுநர் நடத்துவதற்கு தெரியாமல் டிஜிட்டல் போர்டில் தமிழக வெற்றி கழகம் என ஓடவிட்டு உள்ளனர்.உடனடியாக தகவல் தெரிந்த ஓட்டுநர்,நடத்துநர் அதனை நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக திருச்சி மண்டல துணை மேலாளரிடம் பேசிய பொழுது யாரோ இதனை வேண்டுமென்றே பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த டிஜிட்டல் போர்டில் ஓடிய எழுத்துக்கள் நிறுத்தப்பட்டன என அதிகாரி தகவல் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தினர் திருச்சியில் ஏற்கனவே தனியார் பேருந்தில் இதே போன்று டிஜிட்டல் போர்டில் தமிழக வெற்றி கழகம் என ஓட விட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது தற்பொழுது அரசு பேருந்திலேயே தமிழக வெற்றி கழகம் என டிஜிட்டல் போர்டில் ஊர் பெயர் வராமல் கட்சி பெயர் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube



Comments