2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், திருச்சி மாவட்டத்தில் SVEEP (வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி மற்றும் முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் வண்ணக் கோலங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து பேரணிகள் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். வங்கிகள், வரித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
மேலும், Selfie Point அமைத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற கோஷத்துடன், திருச்சி மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav


Comments