Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தண்ணீர் கேட்ட மக்களிடம் கல்யாணமானவுடன் உடனே …ஆபாசமாக பேசிய எம்எல்ஏ- மக்கள் கொதிப்பு

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக கிட்னி திருட்டில் விசாரணைக்குள்ளான கதிரவன் மீண்டும் போட்டியிடுகிறார்.

தொகுதி மட்டுமல்ல நாடு முழுவதும் அவப்பெயரைப் பெற்ற கிட்னி திருட்டு கதிரவன் பணத்தைக் கொடுத்து மீண்டும் சீட்டு பெற்றாலும் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கிராம மக்கள் ஐந்து ஆண்டுகளாக ஏரிக்கு ஏன் தண்ணீர் வழிவகை செய்யவில்லை கேட்டபோது,

பரப்புரையில்
திமுக வேட்பாளர் கதிரவன் தற்போது இத்திட்டத்திற்க்கு சர்வே நடப்பதாகவும் தேர்தல் வந்துவிட்டதாகவும் புள்ளம்பாடிக்கு ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர முடியவில்லை என கட்சிக்காரர் பதிலளித்தார்.மைக்கை பிடுங்கி கதிரவன்
இங்க பாரு கல்யாணம் ஆன உடன் சாயந்திரம் உடனே இது ஆகாது என ஆபாசமாக பேசி பதிலளித்தார்.கேளு இங்க பாருடா என
வாக்கு சேகரிப்பில் திமிராக பொது இடத்தில் மிரட்டி உங்கள் வாக்கு தேவையில்லை என்றும், கேட்ட கேள்விக்கு இழிவான பதிலை சொல்லியது அதிருப்தியையும் கோபத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

கிட்னி தட்டில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளாகி அதில் விளக்கங்களை கொடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏ கதிரவன் மீண்டும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும்போதெல்லாம் வாக்காளர்களிடம் தரைக்குறைவாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் என தொடர்ந்து பேசி வருவதால் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது கடந்த முறை எம்எல்ஏவாக இருந்து திட்டங்களை செய்தேன் என சொல்லி எந்த திட்டங்களையும் செய்யவில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் இந்நிலையில் வாக்கு சேகரிப்பின் பொழுது ஆபாசமாக வாக்காளர்களை தரக்குறைவாக பேசி வரும் கதிரவனின் இந்த செயலுக்கு அனைவரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *