திருச்சியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என கூறி போட்டியிடுகிறார்-விஜயின் வெற்றி திருச்சியில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.கிழக்கு தொகுதி த.வெ.க செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி கட்ட மாக நடக்கிறது.இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்திருச்சி கிழக்கு தொகுதிக்கான

வேட்பு மனுவை சமர்ப்பித்து உள்ள நிலையில் முதல் கட்டமாக மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்தார்.வாக்குப்பதிவு எந்திரத்தில் விஜயின் பெயர் 13-வது இடத்தில் உள்ளது.மீண்டும் அவர் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி -தஞ்சை சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா,டெல்டா மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் நடிகரும் முன்னாள்

கவுன்சிலருமான ஜெரால்டு மில்ட்டன்,
திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன்,நிர்வாகி சவுக்கத் ,காந்தி மார்க்கெட் பகுதிச் செயலாளர் கௌதம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசியதாவது:-
கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.விஜயின் வெற்றி தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.திருச்சியில் புதிய வரலாற்றை எழுத வேண்டும்.பெரம்பூர் தொகுதியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதார் அர்ஜுனா பேசியதாவது:-
திருச்சி உணர்வுபூர்வமான பகுதியாக மாறிவிட்டது.ஏனென்றால் தலைவர் விஜய் திருச்சியில் தான் முதன்முதலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.நான் பிறந்த மண்.தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் அலை வீசுகிறது.தமிழ்நாட்டிலேயே 77 க்கு பிறகு ஒரு பெண்கள் அலை தமிழக வெற்றி கழகத்திற்கு வீசுகிறது.வேட்பாளர்கள் செல்லும் போது ஒவ்வொரு குடும்பமும் வரவேற்கிறது.குடும்பம் குடும்பமாக உணர்வுபூர்வமாக வரவேற்று ஆதரவு தருகிறார்கள்.77 க்கு பிறகு 50 ஆண்டுகள் கழித்து தேர்தல் திருவிழா போல் மாறி உள்ளது.தலைவர் விஜய் வரவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுக்கும் வகையில்திமுகவில் கட்டமைப்பு உள்ளது.இந்த மாதிரி தான் திமுகவின் கட்டமைப்பு உள்ளது.உறவுகளும் அன்பும் நம்பிக்கையும் கலந்த ஒரு கட்டமைப்பு தான் தமிழக வெற்றி கழகம்.எங்கள் அண்ணன் எங்கள் சகோதரர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார்.எங்கள் அண்ணனை நாங்கள் வெற்றி பெறச் செய்வோம் என உணர்வுபூர்வமாக மக்கள் விரும்புகிறார்கள்.

மொத்தம் 304 பூத்துகள் உள்ளது.ஒவ்வொரு பூத்துக்கும் மூன்று நபர்கள் நியமித்து அவர்கள் 10 நபர்களை அழைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று நம் செயல்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.நமது தொகுதி அமைச்சர் வேட்பாளர்மட்டுமல்ல.முதலமைச்சராக ஆகப்போகிறவர் விஜய்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி. பொருந்தாத கூட்டணி தேர்தல் பிரச்சாரக் களத்தில் இதை கண்கூடாக நீங்களே பார்க்கலாம்.திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை.ஆனால் நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார்.திருச்சியே திணறியது.
நிர்வாகிகள் அனைவரும் பூத் லெவலில் வீடு வீடாகசென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
உங்களிடம் டோல் ஃப்ரீ நம்பர் வழங்கப்படும் அந்த நம்பர் மூலம் மக்கள் பிரச்சனைகளை பதிவு செய்தால் உடனடியாக தலைவரின் கவனத்திற்கு நேரடியாக செல்லும்அதைப் பார்த்து தலைவர் பிரச்சனைகளை சரி செய்வார்.
நமது தலைவர் விஜய் முதல்வராக வந்தால் போதைப் பழக்கம் ஒழிக்கப்படும்.தமிழ்நாடு வளர்ச்சி அடையும் வாக்கு சேகரியுங்கள்.நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று.நம்ம எதிர்த்து நிற்பவர்கள் யாரும் டெபாசிட் வாங்க கூடாது.காலையிலேயே சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும்.இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிக அளவு வாக்குகள் பதிவாக வேண்டும்.இன்னும் எட்டு நாட்கள் தான் உள்ளன.தலைவர் கிழக்கு தொகுதிக்கு செய்யப் போகிற திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும்.அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் விஜய் தன் குடும்பமாக எண்ணி நல்லது செய்வார் என வீடு வீடாக சென்று வாக்குறுதி கொடுங்கள்

விஜய் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி அமையும்.
திருச்சியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என கூறி சபதம் செய்து விஜய் இங்கு போட்டியிடுகிறார்.விஜயின் வெற்றி திருச்சியில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments