Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தபால் வாக்குச் சீட்டுகள் மாபெரும் ஆய்வு-38 மாவட்டங்களில் இருந்து 1.22 லட்சம் வாக்குகள் ஒருங்கிணைப்பு

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை தொகுத்து, உரிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பும் முக்கிய பணிகள் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலைஅரங்கத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தபால் வாக்குச் சீட்டுகளை பரிசோதித்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகளை இன்று (13.04.2026) காலை 9.30 மணியளவில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் திரு. ம. சிவஞானம் அவர்கள், திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. வி. சரவணன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மூலம் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டு, இங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த 02.04.2026 அன்று, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்த அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களிடம் Form-12 உட்பட தேவையான ஆவணங்களுடன் தபால் வாக்குச் சீட்டுகளை ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாவட்டத்தில் இருந்தும், பணிபுரியும் இடம் வேறு மாவட்டமாக இருந்தும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பதிவு செய்யப்படாத தபால் வாக்குச் சீட்டுகள் பிரித்து அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நடைபெற்ற இந்த ஆய்வு மற்றும் பிரிப்பு பணிகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 1,22,498 தபால் வாக்குச் சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பணிகளில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு செயல்முறைகளை கண்காணித்தனர்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணிகள் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டன.

“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *