அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.
உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் தொடங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகளும், அறிவியல் ஆர்வத்தை வளர்க்க STEM மையங்களும் அமைக்கப்படும்.
மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

மாணவர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிறந்து விளங்க, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் தனிப்பாடமாக அறிமுகம் செய்யப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments