Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கிராமங்களுக்கு கோடிகள் மதிப்பில் வளர்ச்சி: மீண்டும் ஆதரவு கோரும் கதிரவன்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார். நேற்று பிச்சாண்டார் கோவில், கூத்தூர் இனாம் கல்பாளையம், ஈச்சம்பட்டி, தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, பாலையூர், 94 கரியமாணிக்கம், ஆய்குடி ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
அப்போது எம்எல்ஏ கதிரவன் பேசியது,
கடந்த 5 ஆண்டுகளில், தொகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகள் அனைத்தும் கேட்டறியப்பட்டு, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதிகள் பெற்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் கிராமங்கள் தோறும் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சாண்டார்கோயிலில் ரூ.4.76 கோடியிலும், டோல்கேட்டில் 58 லட்சத்திலும், கூத்துாரில் ரூ.3.63 கோடியிலும், பளூரில் ரூ.82 லட்சத்திலும், பனமங்கலத்தில் ரூ.1 கோடியிலும், வில்வகுடியில் ரூ.29 லட்சத்திலும், வெங்கங்குடியில் ரூ.2.13 கோடியிலும், நங்கமலசத்திரத்தில் ரூ.10 லட்சத்திலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தெற்கு ஈச்சம்பட்டியில் ரூ.80 லட்சம், வடக்கு ஈச்சம்பட்டியில் ரூ.1.13 கோடியிலும், சக்திநகரில் ரூ.1.15 கோடியிலும், இனாம்கல்பாளையத்தில் ரூ.4.38 கோடியிலும், அக்கரைப்பட்டியில் ரூ.1.06 கோடியிலும், தேவிமங்கலத்தில் ரூ.4.76 கோடியிலும், தெற்கு தத்தமங்கலத்தில் ரூ.1.08 கோடியிலும், வடக்கு தத்தமங்கலத்தில் ரூ.2.43 கோடியிலும்,

தெற்குதளுதாளப்பட்டியில் ரூ.1.94 கோடியிலும், வடக்கு தளுதாளப்பட்டியில் ரூ.25 லட்சத்திலும், பாலையூரில் ரூ.15.20 கோடியிலும், ஸ்ரீபுரம்புதுாரில் ரூ,.2.53 கோடியிலும், கரியமாணிக்கத்தில் ரூ.2.47 கோடியிலும், கன்னியாகுடியில் ரூ.3.15 கோடியிலும், ஆய்குடியில் ரூ.1.76 கோடியிலும், மேல, கீழ வங்காரத்தில் ரூ.1.08 கோடியிலும் என இப்பகுதியில் மட்டும் கிராமத்திற்கு ரூ.ஒரு கோடிக்கு குறைவில்லாமல் வளர்ச்சித்திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்குமான நலத்திட்டங்களும் வீடு தோறும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடிப்படைவசதிகள் மட்டுமின்றி, மருத்துவம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கும் மண்ணச்சநல்லுார் தொகுதியில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மண்ணச்சநல்லுார் தொகுதியின் ஒவ்வொரு குக்கிராமமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. மீண்டும் உங்கள் நல் ஆதரவுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைந்த உடன், இக்கிராமங்களில் மேலும் தேவைப்படும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்கப்படும். அதற்கு தேவை, பொய், புரட்டுகளை நம்பாமல், உங்கள் ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் எனக்கு வழங்க வேண்டும்.


மண்ணச்சநல்லுார் தொகுதியில் கடந்த 5 ஆண்டு கால திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் எல்லாம் கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுக கூட்டணியினர் அவதுாறுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதற்கும் ஒரு படி மேலே சென்று இப்போது, என் மேல் கொண்ட அன்பினால், தேர்தல் பணியாற்ற வரும் இளைஞர்களை எல்லாம் பிடித்து, மிரட்டி தவறான கருத்துக்களை கூற வைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி எனக்கு கெட்ட பெயரை உருவாக்க முயற்சி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பொய் மூட்டைகளை தினமும் அவிழ்த்து விட்டு, இதுபோன்று செய்து வருகின்றனர். அவர்களுக்கு நீங்கள் உங்களது ஓட்டுகள் மூலம் பதிலளிக்க வேண்டும். எத்தனை பேரை மிரட்டினாலும், எத்தனை ஆயிரம் வீடியோக்கள் போட்டாலும், மண்ணச்சநல்லுார் தொகுதி மக்களாகிய உங்கள் உள்ளத்தில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. பிரிக்க முயற்சியும், சூழ்ச்சியும் செய்பவர்களை நீங்கள் அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும்.


எனவே, இந்த தேர்தலிலும் உங்கள் ஓட்டுகளை எனக்கு உதயசூரியன் சின்னத்தில் சிந்தாமல், சிதறாமல் அளித்து 2-ம் முறையாக வெற்றியை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு கதிரவன் பேசினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *