Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அடி வாங்கும் தொண்டர்கள் – என்ன செய்கிறார் விஜய் – கிழக்கு தொகுதியில் வலுவான பொறுப்பாளர்கள் நியமிக்காதது ஏன்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் இறுதி கட்ட தீவிர போட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வேட்பாளர்களும் களத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். முக்கியமாக திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தனது தலைவருக்காக நேரடியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் தகவல் போகவில்லையா யார் இந்த தொகுதிக்கு பொறுப்பாளர் அந்த தொகுதியின் தவெக நிர்வாகிகள் யார்? யார்? ஒரு பிரச்சினை நடந்தால் யாரை தொடர்பு கொண்டு தெரிவிப்பது அனைத்தையும் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் போட்டியிடும் கிழக்கு தொகுதியிலேயே பொறுப்பு நிர்வாகிகள் யார் என்று தெரியாமல் தொண்டர்கள் சுணக்கத்தில் உள்ளனர்.நேற்று கேகே நகர் பகுதியில் நடந்த பரப்புரையில் வீட்டில் இருந்த ஒருவர் நீங்கள் தற்குறிகள் முதல்வர் நன்றாக தான் திட்டங்களை கொடுக்கிறார் என்ற வார்த்தைகளை கூறி ஒரு பெண் தொண்டரை கட்டையால் அடித்து காயப்படுத்தி உள்ளார். இன்னும் வரும் நாட்கள் தவெகவினருக்கு களத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். உடனடியாக தமிழக வெற்றி கழக தலைவர் நேரடியாக தலையிட்டு பொறுப்பு நிர்வாகிகளையும் முக்கிய பொறுப்பாளர்களையும் கிழக்கு தொகுதியில் இறக்கி பணிகளை மேற்கொண்டால்தான் சமாளிக்க முடியும் இல்லையென்றால் தொடர்ந்து தொண்டர்கள் அடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என கதறுகின்றனர் தவெகவினர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *