திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடி ஒன்றியத்தில், கழகத் தலைவர் ஆணைக்கிணங்கவும், கழக முதன்மைச் செயலாளர்களின் வழிகாட்டுதலின்படியும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் தொகுதி மறுவரையறை சீரமைப்பு திட்டத்தை எதிர்த்து பிரம்மாண்ட கண்டன போராட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,

லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் T. பாரிவள்ளல் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தியும், ஒன்றிய அரசின் உத்தரவு நகலை எரித்தும் தங்களது பலமான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments