தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி மீது திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காலி மதுபான பாட்டில் வீசி தாக்குதல்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி கீழப்புதூர் அரசமரத்தடியில் லியோனி மீது மதுபான பாட்டில் வீசப்பட்ட நிலையில்,அவர் காயம் இன்றி தப்பினார்.

திருச்சி கிழக்குத் தொகுதி தற்போது திமுக வசமுள்ளது. அதன் சட்டமன்ற உறுப்பினராக இனிகோ இருதயராஜ் உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் லியோனி வாக்கு சேகரித்த போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இனிகோ இருதயராஜ்யை எதிர்த்து தவெக தலைவர் விஜய், அதிமுக ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இது குறித்து திருச்சி மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments